கன்னியாகுமரி மாவட்ட புகைப்படம் மற்றும் வீடியோ கலைஞர்கள் நலச்சங்க 24வது ஆண்டு துவக்க விழா மார்த்தாண்டத்தில் நடந்தது. மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். மேலும் நிர்வாகிகளுக்கு கேடயம், புகைப்படம் மற்றும் வீடியோ போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை எஸ்.பி. வழங்கினார்.