tamilnadu epaper

புத்திசாலிகளே இல்லாத ஊர்

புத்திசாலிகளே இல்லாத ஊர்

புத்திசாலிகளே இல்லாத ஊர் ஒன்று இருந்தது. அங்கு புதிதாக ஒரு ரயில் நிலையம் துவக்கப்பட்டது.*_


_முதல் நாளே, மிகக் கோரமான விபத்து நடந்துவிட்டது. பத்திரிகைக்காரர்கள் அங்கு விரைந்தனர்._


_*உயிர் பிழைத்திருந்தது ஒரே ஒரு நபர். அவர் நடுக்கத்துடன் நடந்ததை விவரித்தார்... "எல்லா ஜனமும் ஒழுங்காக பிளாட்பாரத்தில்தான் நின்றிருந்தனர். திடீரென்று, 'சென்னை செல்லும் ரயில் இன்னும் சற்று நேரத்தில் பிளாட்பாரத்துக்கு வந்து சேரும்' என்று ஒலிபெருக்கியில் அறிவித்தார்கள். பிளாட்பாரத்தில் ரயில் ஏறப்போகிறது என்று நினைத்து, அத்தனை பேரும் தண்டவாளத்தில் குதித்து, ரயிலில் மாட்டிக் கொண்டார்கள்!"*_


_"சரி, நீங்கள் மட்டும் எப்படித் தப்பித்தீர்கள்?"_


_*பதில் சோகமாக வந்தது..*_

_*"அதை ஏன் கேட்கிறீர்கள்? தற்கொலை செய்துகொள்வதற்காகத் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்திருந்தேன். அறிவிப்பு வந்ததும், ரயிலில் விழுவதற்காகச் சரேலென்று பிளாட்பாரத்திக்கு தாவனேன்!"*_