தியாகத்தின்
அடிப்படை
புரிவதில்லை
அர்த்தமும்
தெரிவதில்லை ....."
சுட்டெரிக்கும்
சுயநலம்
தடை போடுகிறது
செயற்கைக் கோள்
வேகத்தை விட
அதிகமாக ....."
தீவிரவாதம்
தீவிரவாதி
தெரியவில்லை
மதியை சலவை
செய்து அழிவின்
ஆக்கத்திற்கு
வழி தேடுகிறது .... "
மூட நம்பிக்கை
பகுத்தறிவு
தாண்டவம்
ஆடும் காலம்
ஆனாலும் போர்
முடிவதாக தெரியவில்லை ..."
பிறப்பில் ரகசியம்
எதுவும் கற்பிக்க
படவில்லை நாடும்
நகரமும் எழுதப்
படவில்லை .... "
மனிதன் என்கிற
ஒரே இனம்
ஆண் பெண்
என்கிற ஈர்ப்பு
கொண்ட குணம்......"
இன்னும் ஆற்றவு
பெற்ற மனிதனாய்
வாழும் காலம்
கானில் நீரோ
இல்லை இதுவும்
இறைவனின்
கட்டளையா .... "
அவன்றி ஓர்
அணுவும்
அசையாது ....."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .