வந்தவாசி, ஏப் 08:
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி ஸ்ரீ ரங்கநாத பெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழாவின் ஐந்தாம் நாளான நேற்று உற்சவ மூர்த்தி மோகினி அலங்காரத்தில் பல்லாக்கு வாகனத்தில் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தார். இந்த வைபவத்தில் பாகவதர்கள் நாலாயிர திவ்வியப் பிரபந்தங்கள் பாடியவாறு சுவாமியுடன் வந்தனர். முன்னதாக மேலும் இந்த வைபவத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பங்கேற்ற அனைவருக்கும் தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்டது.