*(1)*
எவன் ஒருவனிடத்தில் நம்பிக்கை இல்லையோ அவனே நாத்திகன்
*- விவேகானந்தர்*
*(2)*
கல்விச்சாலை ஒன்றை திறப்பவன் சிறைச்சாலை ஒன்றை முடியவனாகிறான்
*- விக்டர் ஹியூகோ*
*(3)*
துன்பம் என்பது புல்பூண்டுகளைப் போன்றது, அது தானாகவே வளர்ந்துவிடும். ஆனால் வியர்வை சிந்தி உழைத்துப் பாடுபட்டால்தான் இன்பம் என்ற வளமான பயிரை அறுவடை செய்யமுடியும்
*- புத்தர்*
*(4)*
சோம்பேறி யார் ? ஒரு வேலையும் செய்யாமல் சும்மா இருப்பவன் மட்டுமல்ல, இப்போது செய்து கொண்டிருப்பதைக் காட்டிலும் சிறப்பாகப் பணியாற்றுவதற்கு திறமையும் வாய்ப்பும் இருந்தும் அப்படிச் செய்யாமல் இருப்பவனும் சோம்பேறிதான்
*- சாக்ரடீஸ்*
*(5)*
உன் கையிலுள்ள ஓட்டு ஒரு யோக்கியனுக்கு விழுந்தால் உன் எதிர்காலம் காப்பாற்றப் படுகிறது. அதுவே ஒரு அயோக்கியனுக்கு விழுந்தால் அவனது எதிர்காலம் காப்பாற்றப் படுகிறது !
கண்ணதாசன்
ஆர். ஹரிகோபி,
புது டெல்லி