ஆபாசம் எழுதாப் பேனா
ஆண்மை வளர்க்கும் தானா!
கோபம் தூண்டாப் பேனா
கொள்கை வளர்க்கும் தானா!
பாபம் உரையாப் பேனா
பாதை காட்டும் தானா!
தீபச் சுடரான பேனா
தீங்கினைச் சாடும் தானா!
அடக்கம் எழுதும் பேனா
அமைதி காக்கும் தானா!
இடக்காய் கருத்திடும் பேனா
பிணக்கில் குனியும் தானா!
முடக்கம் எரிக்கும் பேனா
முயற்சி கூட்டும் தானா!
கருணை விதைக்கும் பேனா
கலாச்சாரம் காக்கும் தானா!
அச்சம் தவிர்க்கும் பேனா
அடக்குமுறை ஒழிக்கும் தானா!
பொறுத்தது போதும் பேனாவே
பொங்கியெழுந்து வா தானாகவே!
-----
முகில் தினகரன், கோயமுத்தூர்