tamilnadu epaper

மணமான பெண்

மணமான பெண்

ஐப்பசிமாதம்
நான்காம் வெள்ளி
அந்தி வேளை
வெள்ளை நிலா
வெண்பட்டு உடுத்தி
வந்தாள் உலா
பளபள வதனத்தில் 
காந்தக் கண்களா
கண்டார் சொல்வர்
'கோயில் சிற்பமா'..!

வெண்நிலா மாட்சி
கண்குளிர காட்சி
பண்பாட முடியாமல்
திண்டாடி வீழ்ச்சி
இளைஞர் உள்ளங்கள்
அலை யெனச் சூழ,
கண்டதும் கவிதையில்
பெண்மையை புகழ்ந்து
வெண்பா பாடியவர்
உண்மையில் சிலரே...!!

பாதங்கள் இரண்டும்
தாமரை நிறங்கள்
படிகள் தாண்ட
கீழே குனிந்தாள்
தாலிக் கொடியும்
விரலில் மெட்டியும்,
தாவியே ஓடினாள்,
தன்கணவன் வரவுகண்டு..
கூடிய ஆடவர் 
ஓடினர் கலைந்தே..!!!

                      -துரை சேகர்
                       கோவை.