tamilnadu epaper

வெள்ளைக் காகிதம்

வெள்ளைக் காகிதம்


வெறுமையானக் காகிதத்தின் 

மலர்களான எழுத்துக்கள், கவிதைகள், கதைகள்

காதல் கனவுகள்

உணர்வுகளின் தடங்கள் விரியலாம், பதியலாம்.


காலத்தின் கரங்களால்

பொய்களின் உண்மைகள்

பதியும் போது...


கோபத்தில் நினைவுகளின் சுவடுகள் கிழிக்கப்படும் 

போது.........


விரல்கள் விட்டுச் 

சென்றத் தடம் 

மௌனத்தின் மொழியாக உருமாறும் ...

 

உறக்கமற்ற இரவுகளுக்குச்

சாட்சியான காகிதமே...


தொடக்கமாய், முடிவாய்

எழுதப்படும் ஒவ்வொரு வரியிலும் விரியும் 

மாற்றங்கள் வரலாற்றின் அத்தியாயமாக நிற்க

வெள்ளைக் காகிதமேச் சாட்சி



-நா.பத்மாவதி

கொரட்டூர்