tamilnadu epaper

புவி வெப்பம்

புவி வெப்பம்


நெருப்பிலே சமைப்பதை நிறுத்தினால் உலகிலே

   நிறையவே வெப்பம் குறையும் !

நெருப்புக்கு இணையாக சூரிய வெப்பத்தில் அடுப்புகள் ஏற்ற வேண்டும் !

   இருப்பிடம் பொதுவிடம் கழிவுகள் அனைத்தையும்

   நீரிலே கலந்தி டாமல்,

   புதைக்கவும் சுழற்சியால் புதுப்பிக்கும் அனைத்தையும்

   பொறுப்புடன் செய்ய வேண்டும் !

விருப்புடன் அனைவரும் பசுநெய்யில் தினந்தோறும்

   விளக்குகள் ஏற்ற வேண்டும் !

  வேம்பு எலுமிச்சை புங்கன் துளசியை

  வீடெல்லாம் வளர்க்க வேண்டும் !

பொறுப்புடன் இயற்கையின் கொடைகளைப் போற்றுதல் . புவிவெப்பம் குறைக்கும் மார்க்கம்!

  புலங்களின் இச்சையை சமநிலை படுத்துவோம்

   பூமியைக் குளிரச் செய்வோம்!!



-குடந்தை பரிபூரணன்.