tamilnadu epaper

கொஞ்சம் ஹைக்கூ..

கொஞ்சம் ஹைக்கூ..


இறகு பந்தாடுகிறார்கள்

தவறும் பந்தில்

ஒளியும் வெற்றி. 



மழையில் நனையும் விலங்குகள்

தணிக்கின்றன

வெப்பத்தை. 


அப்பா போலவே வேகம்

நெருங்குகிறது

பதினாறாம் நாள் சடங்கு


மழை நின்று விட்டது

ஓடுகிறார்கள் 

மிதிபடுகிறது பூமி. 


-ஹரணி

தஞ்சாவூர்- 2