உலகின் உயிர்களுக்கு
அடிப்படைத் தேவை தான்
தண்ணீர் தண்ணீர் ஆகும் நீர்
இல்லையேல் உயிர் இல்லை
உயிரினம் படிப்படியாய்
அழிந்து ஒழிந்து விடும்
நீரின்றி அமையாது உலகு
என்பது வள்ளுவன் வாக்கு
பஞ்சபூதங்கள் எல்லாம்
ஒன்றுடன் ஒன்று பின்னி பிணைந்து இணைந்து உள்ளது இது இயற்கையின் தகமைவு
உயிரினம் வளராது வாழாது தண்ணீர் தேவை தேவையே
நீரில்லையேல் உலகம் இல்லை உலகு பாலை வனம் ஆகும்.
மானிடனே கொஞ்சம் நில் கவனி சிந்தி செயல்படு
மரங்களை அழித்து மழையை இழந்தோம் உயிரினம் நிர்வாணி
இயற்கையை பாதுகாப்போம்
நம்மை அது வாழவைக்கும் தாவரங்களை வளர்ப்போம் நாம் வாழ்வாங்கு வாழலாம் வாரீர்.
-பேராசிரியர் முனைவர் வேலாயுதம் பெரியசாமி
சேலம்