tamilnadu epaper

தன்னம்பிக்கை

தன்னம்பிக்கை


கொண்டையை உயர்த்தி உன்னை கூவி எழுப்ப சேவலல்ல நான்!


கம்பீரமாய் 

ஒலி எழுப்பி கண்விழிக்க 

வைக்கும்

காண்டா மணி அல்ல நான்!


பாட்டிசைத்துத் துயிலெழுப்ப பறவையினம் அல்ல நான்!


தன் பட்டொளியால் தொட்டெழுப்ப கதிரவனும் இல்லை  நான்!


உன்னுடனே உருவாகி உன்னோடு உறவாடுபவன் நான்!


உன்னை ஊக்குவிப்பனும் உற்சாகபடுத்துபவனும் நான்!


உறங்கத் தொடங்கியது முதல் உறங்கி விழிக்கும் வரை 

உன்னைக் காத்திருப்பவன் நான்!


என் பேராபரணங்களான 

தன்னம்பிக்கையையும் திறமையையும்

உன் போராபரணங்களாய் தந்து 


வாழ்க்கையை வெற்றிக்கொள்ள 

உதவும் உள்ளுணர்வு நான்!


உணர்ந்துக்கொள்! உறக்கத்தை விடு! உற்சாகத்துடன் எழு!!


உலகம் உன்னுடன் தான்!!! 

உன்னடியில் தான்!!!


-ரேணுகாசுந்தரம்