tamilnadu epaper

உழைப்பே... உன்னதம்...

உழைப்பே... உன்னதம்...


உழைப்பின்றி போனால் உணவின்றி போகும்...


வியர்வை வடியாமல் போனால் வாழ்க்கை விடியாமலே போகும்...


ஏதுமில்லை என்பது வெற்றுப் புலம்பல்...


எல்லாம் நம் வசம் என்பதே மாறுதல் விதி...


ஏழ்மை சோம்பலின் குழந்தை


ஏக்கம் இயலாமையின் கொணரும் தேக்கம்...



தேகம் தானே மூலதனம்..


விரல்கள் தானே ஆயுதம்...


வளமையை நோக்கி ஓடு...


வறுமை விலக்கி வானவில்லாய் உயர்ந்திடு


கவின் கலையாய் வாழ்வை வண்ணமாக்கிடு...



உழைப்பு ஒன்றே உயர்த்தும் என்பதை திண்ணமாக்கி விடு...


வியர்வையே உடலின் பூக்கோலம்...


உழைப்பின்றி போனால் அலங்கோலமாகும்... பூகோளம்...



-தே.சௌந்தரராஜன்

கல்யாணம் பூண்டி