tamilnadu epaper

மனைவி

மனைவி

அப்பாவை எரித்த போது 
ஒரு முறை எரிந்தேன் 
அம்மாவை எரித்த போது 
மறு முறை எரிந்தேன்
சாம்பலாய் கிடந்த எனக்கு
புத்துயிர் கொடுத்த புனிதமே...
மனைவியாய் வந்த மனிதமே...
நன்றி சொல்ல உனக்கு 
நூறு ஜென்மம் 
போதாது எனக்கு!

-ம.பாஸ்கர்,
தஞ்சாவூர்.