tamilnadu epaper

மரிக்கொழுந்து வாசத்திலே மாமனவன் நேசத்திலே

மரிக்கொழுந்து வாசத்திலே மாமனவன் நேசத்திலே

நெஞ்சுக்குள்ளே வச்சிருக்கேன் 

நெதமும் நெனச்சிருக்கேன் 

 

வயசுபுள்ள காத்திருக்கேன்

வாடாம பாத்துக்கய்யா 

 

மல்லிகைப்பூ சூடியிருக்கேன்

மச்சானே வாருமய்யா 

 

கன்னமும் செவந்திருக்கு 

ஒன்னோட முத்தத்தாலே 

 

காதலும் உண்டாச்சி

வெட்கமும் வந்திருச்சு 

 

எம்மனச புரிஞ்சுக்கய்யா

என்னைத்தான் ஏத்துக்கய்யா 

 

அரும்பு மீசக்காரா

கட்டழகு மேனிக்காரா 

 

ஆத்தோரம் ஆலமரத்துல

ஊஞ்லொண்ணு கட்டுமய்யா 

 

அந்திசாயும் நேரத்திலே

ஆனந்தமா ஆடலாமே 

 

தோளிலே சாஞ்சிக்கிறேன்

மெல்லத்தான் அணைச்சுக்கய்யா 

 

குதூகலமாகும் மனசு

வாலிப வயசு 

 

மரிக்கொழுந்து வாசத்திலே மாமனவன் நேசத்திலே 

 

வசியம் பண்ணி 

போவதென்ன நில்லுமய்யா 

 

வெள்ளக்கட்டி பேச்சுலதான்

உருகித்தான் போனேனே 

 

பவுசு காட்டாதய்யா

பரிசந்தான் போடுமய்யா 

 

கண்ணாலம் பண்ணிக்குவோம்

சந்தோசமா வாழ்ந்திடுவோம்

 

பெ.வெங்கட லட்சுமி காந்தன்.

விருதுநகர்