tamilnadu epaper

மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள்

மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள்

கலை பண்பாட்டுத்துறையின் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் திண்டுக்கல்லில் மாணவர்களின் கலைத்திறனை வளர்க்கும் விதமாக சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலைகள் கற்றுத் தரப்படுகிறது.

திண்டுக்கல்லில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இம்முகாம் நடக்கிறது. 6 முதல் 16 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள் இதில் பங்கேற்கலாம். 

கோடை விடுமுறையை மாணவர்கள் பயனுள்ளதாக கழிக்கும் வகையில் இந்த முகாமுக்கு, மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

 பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.