tamilnadu epaper

முடுவார்பட்டியில் காளியம்மன் கோவில் உற்சவ விழா.

முடுவார்பட்டியில் காளியம்மன் கோவில் உற்சவ விழா.


அலங்காநல்லூர்.ஏப்ரல்.13.


மதுரை மாவட்டம் பாலமேடு அருகே முடிவார்பட்டியில் தேவேந்திரகுல வேளாளர் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட ஸ்ரீ காளியம்மன் கோவில் உற்சவ விழா நடந்தது. அம்மனுக்கு காப்பு கட்டுதலுடன் பக்தர்கள் காப்பு கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். அம்மாகுளம் கண்மாய் சென்று கரகம் ஜோடித்து, முளைப்பாரி ஊர்வலத்துடன் அம்மன் கோவில் வந்தடைந்தார். தொடர்ந்து பொங்கல் வைத்து கிடாய் வெட்டி உச்சிகாலை பூஜை நடந்தது.பின்னர் பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம்,தீச்சட்டி உள்ளிட்ட பல்வேறு நேர்த்திக்கடன்களை செலுத்தினர். தொடர்ந்து மேளதாளம் முழங்க வான வேடிக்கையுடன் கரகம் மற்றும் முளைப்பாரி பூஞ்சோலை செல்லும் நிகழ்ச்சி நடந்தது. இந்த விழா ஏற்பாடுகளை தேவேந்திரகுல வேளாளர் உறவின்முறை மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர்.