திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் பேரூராட்சி பகுதியில் உள்ள வளையமா புரத்தில் மெயின் ரோட்டில் அருள்பாலிக்கும் ஸ்ரீ ஆலமுத்து அய்யனார் ஆலயம் அமைந்துள்ளது. இவ்வாலயத்தில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் தேர்த்திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டு கடந்த 04-ஆம் தேதி வெள்ளிக்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. கடந்த 07-ஆம் தேதி திங்கட்கிழமை முதல் தினசரி சுவாமி வீதியுலா நடைபெற்று வந்தன. நேற்று 11-ஆம் தேதி வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா ஜேண்டை மேளக்கச்சேரி, வானவேடிக்கையுடன் வீதியுலா காட்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனர். இன்று 12-ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4 மணிக்கு சுவாமி மஞ்சள் நீராட்டு விழா, இரவு 12 மணிக்கு சுவாமி வழி அனுப்புதல் (அதாவது மலையாளம் செல்லுதல் நிகழ்ச்சி )நடைபெற்றது. இத்திருவிழாவை வளையமாபுரம் நாட்டாண்மைகார்கள், கிராமவாசிகள் இணைந்து சிறப்பாக செய்திருந்தனர்.