tamilnadu epaper

ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம்

ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம்

தெப்பல் உற்சவம் முன்னிட்டு சுவாமி திருவீதி உலா:


செய்யாறு ஏப். 13,


செய்யாறு திருவோத்தூர் அருள்மிகு பால குஜாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் கோயிலில் பங்குனி உத்திரம் முன்னிட்டு மூன்று நாள் செப்பல் உற்சவம் நேற்று முன்தினம் துவங்கியது .


நேற்று வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் ,அருள்மிகு பால குஜாம்பிகை சமேத ஸ்ரீ வேதபுரீஸ்வரர் ஆகியோர் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா நிகழ்வு நடைபெற்றது .


திரு வீதி உலா நிகழ்வு கோனேரியான் குளக்கரை தெப்பர் உற்சவ மண்டபத்துடன் முடிவடைந்தது .


சுவாமி திருவீதி உலா நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மூன்றாம் நாள் தெப்பல் உற்சவம் வெகு விமர்சையாக நடைபெறும்.