முதுமை வரம் என்றார்கள்....
அனுபவி என்ற ஆலோசனைகள்...
ஆனால் இளமையிலிருந்து
தொடர்ந்ததை
ஒவ்வொன்றாகத் துறந்தால் தான் அனுபவிக்கலாமாம்..
உணர்ந்தேன்
அழகிய மாடித்தோட்டம்
மூட்டு வலியால்
கைவிடப்பட்டது...
கொல்லைப்புற மாமரம் பூக்கள் சிந்தி அடுத்த வீட்டிற்குத் தொந்தரவு
அகற்றப்பட்டது...
பொக்கிஷமாய்ப் புத்தகங்கள் அலமாரியில்
படிக்க ஆசைப்படா சந்ததிகள்
படிப்பார் இன்றி தூசி படிந்து
சேர்த்து வைத்த கலைப் பொருட்கள்
காட்சிப்பொருளாய்
சீண்டாத பிள்ளைகள்..
ஆசைப்பட்ட உணவுகள் அள்ளி உண்ணத் தடை
உடல் உபாதைகள்
ஆலோசனை
களை ஏற்காத இன்றைய வளரும் தலைமுறை
தட்டிக் கேட்டால் பூமர்
களிப்புடன் வாழக் கட்டிய வீட்டில் முதுமையின் முட்டுக்கட்டை
எப்படி அனுபவிப்பது?
மனதைக் கட்டுப்படுத்தி வாயை கட்டுப்படுத்தி வாழ்வதா?
முதுமை வரம் அல்ல முரண்பாடுகளின் மூட்டை சுமந்தே ஆக வேண்டும்