மனதுக்கு அமைதி
உடலுக்கு உழைப்பு
மூளைக்கு ஓய்வு
சிறிது நேரம்
யோகா என்கிற
நல் தியானம் ..."
நல்ல எண்ணம்
நல்ல செய்கை
நல்ல சிந்தனை
பெருக தியானம்
யோகா வேண்டும் ..."
தவறுகளை திருத்திவிட
செய்த பிழைக்கு
மனம் வருந்திட
பரிகாரம் தேடிட
யோகா அவசியம் ..."
அலை பாயும்
மனதை அடக்கிட
சரியான பாதையை
கட்டமைத்திட
யோகா அவசியம் ..."
நல்லது எது
கெட்டது எது
என்று பகுத்து
பிரித்து பயணிக்க
யோகா முக்கியமே ..."
மனச் கசப்புகள்
அகன்றிட அகம்
தெளிந்திட முகம்
மலர்ந்திட யோகா
துணை நிற்குமே ..."
திறமையை போற்றிட
சமத்துவம் நிலவிட
மனிதம் தழைத்திட
யோகா ஒரு
வழி காட்டியே ..."
விழிப்பும் உறக்கமும்
உணவும் ஓய்வும்
உழைப்பும் நிறைவும்
சமன்பட முன்நிற்கும்
காவலன் யோகா ..."
கவலைகள் தீர
பற்றாக்குறை பற்றி
யோசிக்க
தொலை நோக்கு
பார்வை மேம்பட
யோகா அடிக்கல்லே ..."
கனவுகள் பலிதம்
பெற நினைவுகள்
காரிய சித்திபெற
யோகா மூலவிதையே..."
- சீர்காழி. ஆர். சீதாராமன் .