எண்சாண் உடம்புக்கு
சிரசே பிரதானமென
மணிசார் கரடியாய்க் கத்தினாலும்
சீராக முடி வெட்டிக் கொள்ளாமல்
சிலிப்பிக்கொண்டிருக்கும்
அலங்கோலத் தலைகளோடு
சீருடை அணியாமல்
சாக்ஸ் போடாத பூட்ஸ் கால்களுடன்
பென்சில் பேண்ட் சகிதமாய்
எனக்கென்ன மனக்கவலையென
பள்ளிக்கு வந்த பையன்களை
விசிலடித்து மைதானததிலேயே
நிறுத்தினார் பீட்டி வாத்தியார்
கசாமுசாவென இல்லாமல்
ஒழுங்காய் வெட்டிவிடப்பட்ட
கிளைத் தலைகளோடு
சீராக வளர்நது நிற்கும்
மைதான மரங்கள்
ஒழுங்கீன மாணவர்களைப் பார்த்து
உள்ளுக்கள் கேலிபேசின
பாவம் வளர்ப்பு
சரியில்லையென.
*****
செம்பருத்தி செம்பருத்தி
பள்ளிக்கு வரும் வழியில்
பாதையோர
மதில்சுவருக்கு வெளியே
பூத்திருந்த செம்பருத்தியை
பறிக்கும் எத்தனிப்பில் தோற்று
ஏமாற்றத்தோடு
திரும்பியவளின் கனவில்
ஏகப்பட்ட செம்பருத்திகள்
பூத்துக் குலுங்கின…
காசாவயல் கண்ணன்.
காசாவயல் கண்ணன்
திருக்கோகர்ணம்
புதுக்கோட்டை.