tamilnadu epaper

வழிகாட்டி

வழிகாட்டி


        சதாசிவம் - பிரேமா தம்பதியருக்கு இரண்டு பெண்கள் மூன்று ஆண் குழந்தைகள் என பெரிய குடும்பம் .


      சதாசிவம் பள்ளிக் கூடத்தில் ஹாஸ்டல் சமையல்காரர் இருபது மாணவர்கள் தான் தங்கும் வசதி கொண்டது . வருமானம் மிகக் குறைவு .


    பிரேமா மாமி வடகம் அப்பளம் இட்டு அதில் வரும் வருமானம் கொண்டு குடும்பத்தை நடத்திக் கொண்டு ஐந்து குழந்தைகளையும் நன்கு படிக்க வைத்தனர் .


     வாடகை ஓட்டு வீடு நடுவில் வீடு இடிந்து விழுந்து வானம் பார்த்த பூமி இது தான் அவர்கள் வாழ்க்கை .


       மூன்று வேளை உணவு என்பது ரமேஷ்க்கு எட்டாக் கனி தான் . இரண்டாவது மகன் ரமேஷ் டிப்ளமோ படித்து சின்ன வேலைக்கு சென்று , அந்த இடிந்த வீட்டில் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு டியூஷன் எடுத்து அதில் வருமானத்தில் குடும்பத்திற்கும் தன் பி. இ மேல் படிப்பிற்கும் செலவு செய்தான் .


   நடந்து சென்றே கல்லூரி படித்ததும் , சைக்கிள் சென்று உழைத்ததும் ரமேஷின் அன்றாட வாழ்வியல் வாடிக்கை .


    சில ஆண்டுகளில் தேர்வு எழுதி அரசாங்க வேலையில் அமர்ந்தான் ரமேஷ்.


     பிறகு தன் அண்ணனுக்கு வேலைக்கு வழி செய்து திருமணம் செய்து வைத்து . தன் தங்கை இருவருக்கும் திருமணம் முடித்து பிறகு தான் திருமணம் நாற்பது வயதுக்கு மேல் செய்து கொண்டு. 


    பின் தன் தம்பிக்கு திருமணம் முடித்து தங்கை குடும்பங்களை பாதுகாத்து , தன் தாய் தந்தையை கடைசி வரை நல்ல நிலையில் வைத்து கொடுத்து சிவந்த கைகளாக , சேவையின் கடமையின் நாயகனாக திகழ்ந்தான் ரமேஷ் .


      மண்ணில் பிறக்கும் சிலரே ரமேஷ் போன்று கடின உழைப்பு இலக்கு லட்சியம் என தன் நம்பிக்கையோடு வாழ்கிறார்கள் .


      ரமேஷை வழிகாட்டியாக வைத்து பலரும் வாழ்வில் முன்னேற்ற பாதைக்கு வரலாமே . தன் நம்பிக்கை தான் ஊன்றுகோல் என்பதை உணரலாமே ...."


- சீர்காழி. ஆர். சீதாராமன் -

- 9842371679 .