இன்று (04.04.2025) தமிழ்நாடு இ பேப்பர் நாளிதழில் முதல் பக்கத்தில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் இந்திய மீது 27சதவீதம் வரி விதிப்பு செய்தி பரபரப்பு ஏற்பட்டுத்தியுள்ளது.
நலம் தரும் மருத்துவம் பகுதியில் கோடைக்கால ஏற்ற சில உணவுகள் தொகுப்பு சிறப்பு.
மஞ்சப்பை சிறுகதை கூறும் கருத்தை அனைத்து வணிகர்கள் மற்றும் பொது மக்கள் கடைப்பிடிக்க வேண்டும், இதன் மூலம் மாசு இல்லா உலகம் உருவாகும்.
தினமும் ஒரு தலைவர்கள் பகுதியில் சோஜோர்னர் ட்ரூத் பற்றி ஆப்பிரிக்க அமெரிக்க அடிதனம் & பெண் உரிமை பற்றிய பல போராட்டம் பற்றி அறிந்து கொண்டேன்.
உயிர் மூச்சு திரைப்படம் திரையரங்குகள் கிடைக்கவில்லை என்ற தகவல் திரையரங்குகள் குறைந்து வருகிறது என்று தெரிகிறது.
பல்சுவை களஞ்சியம் பகுதியில் சர்க்கரை நோய் ஒழிக்கும் கோவில் மற்றும் ராமபிரான் காலடிப்பட்ட தலம் ஆகிய தகவல் மிகவும் அருமை.
இலங்கை கடற்படை தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடிப்பது வேதனை அளிக்கிறது.
*கடந்த (29.03.2025) நாளிதழில் கடந்த (22.03.2025) அன்று வட்டத்திற்குள் வார்த்தை பகுதியில் கேட்கப்பட்ட கேள்விக்கு வெற்றியாளராக என் பெயர் இடம்பெற்றது அதன் பிறகு எந்த தகவலும் இல்லை.
-T.P.குமரன்,
மகர்நோம்புச்சாவடி,
தஞ்சாவூர்.