அன்புடையீர்,
வணக்கம்.11/4/ 2025 அன்றைய தமிழ்நாடு இ பேப்பர்.காம் முதல் பக்கத்தில் மும்பை தாக்குதல் தீவிரவாதி ராணாவே இந்தியாவிடம் ஒப்படைத்தது அமெரிக்கா என்ற செய்தி அதிர்ச்சியான தகவலாக எண்ணிப் படிக்க வைத்தது எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு முதல்வர் விருது வாங்கியதற்கு வாழ்த்து தெரிவித்தது மிகவும் அருமையான தகவல் இடி மின்னல் குறை சூரை காற்றால் கடும் பாதிப்பு என்ற செய்தி அதிர்ச்சியாக இருந்தது இன்றைய பஞ்சாங்கம் மிக அற்புதமாக இன்றைய நாளை எனக்கு தொடங்க உதவியது. திருக்குறள் மிகவும் அருமை படிக்கும்போது அதன் பொருளும் புரிவதால் மனதுக்கு சந்தோஷமாக உள்ளது. கோவில்களில் நடக்கும் தேரோட்டம் அந்த சன்னதியில் உள்ள கடவுள் என்று அத்தனை செய்திகளையும் அழகாக தொகுத்து கொடுத்து ஒரு ஆன்மீக உணர்வுக்கு சந்தோஷம் விருந்தளிக்கும் தமிழ்நாடு இ பேப்பருக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். அன்னாசிப்பழம் சாப்பிடுவதால் நமக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்று நலம் தரும் மருத்துவ பகுதியில் மிக அழகாக தெளிவாக சொன்னது பாராட்டுக்குரியது. இனி நானே தலைவர் அன்புமணி அவர்கள் செயல் தலைவர் என்று ராமதாஸ் அவர்களின் செய்கை இன்றைய அரசியலில் அழகாக புரிய வைத்தது. அமெரிக்காவும் சீனாவும் வரியுத்தம் செய்து கொள்வதால் தான் நாட்டில் தங்கத்தின் விலை உயர்கிறது என்ற செய்தியை படித்ததும் அதிர்ச்சியாக இருந்தது. அமராவதியில் சொந்த வீடு கட்டுகிறார் ஆந்திர முதல்வர் சந்திரபாபு அவர்கள் என்ற செய்தி ஆர்வமுடன் படிக்க வைத்தது. தினம் ஒரு தலைவர் பகுதியில் இன்று பரலி சு நெல்லையப்பர் அவர்களின் வரலாறு படமும் ஆவலுடன் அந்த செய்தியை படிக்கத் தூண்டியது . பல்சுவை களஞ்சியம் பகுதியில் வந்த மீம்ஸ் விடுகதை ஜோக்ஸ் எல்லாம் என்னை மறந்து பலமுறை பார்க்க வைத்தது. தெய்வீக அருள் தரும் ஆன்மீகம் பக்கத்தில் வந்த தெய்வீக செய்திகள் அனைத்தும் மிகவும் அருமை.. மன கஷ்டங்களை நீக்க எளிமையான பரிகாரம் என்று சொன்னது இன்றைய பலருக்கும் பயனுள்ள தகவல். மனம் நிறைந்த பாராட்டுக்கள். பதினாறாம் பக்கத்தில் வந்த அனைத்து கடவுள் படங்களும் செய்திகளும் மிகவும் அருமை நேரில் சென்றால் கூட இவ்வளவு அருமையாக பார்க்க முடியுமா என்று சந்தேகத்தை ஏற்படுத்தும் அளவுக்கு நல்ல தெளிவான படங்களும் செய்திகளும் உள்ளது. பாராட்டுக்கள். முதலமைச்சர் இளைஞர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று சொன்னது அனைவருக்கும் மகிழ்ச்சியான தகவலாக இருக்கும். க்ரைம் கார்னர் வழக்கம்போல் அதிர்ச்சியான தகவலை சொன்னது. விளையாட்டு கார்னர் விளையாட்டு ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் நல்ல விளையாட்டு செய்தியை அழகாக தொகுத்து கொடுத்துள்ளது மனம் நிறைந்த பாராட்டுக்கள். அமெரிக்காவில் வரிகள் மோசமான பொருளாதாரப் பிரச்சினைகளின் வெளிப்பாடு என்று இலங்கை பொருளாதார நிபுணர் கருத்து தெரிவித்ததை பார்த்தவுடன் இதை பரிசீலிக்க வேண்டும் என்று சொல்லத் தோன்றியது. நல்ல செய்திகளை அழகாக தொகுத்து கொடுத்து வெள்ளிக்கிழமை விடியலை சொல்லெணா சந்தோஷத்தில் ஆழ்த்திய தமிழ்நாடு இ பேப்பரின் ஆசிரியர் குழுமத்திற்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள் .
நன்றி
உஷா முத்துராமன்