பகல் காம் தாக்குதல் விவகாரத்தில்
இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு
அளித்து இருப்பது வியப்பை
தருகிறது. பயங்கரவாதிகளை
மோடி அரசு தப்ப விடாது என
அமித்ஷா கூறி இருக்கிறார்
முன்னரே எச்சரிக்கையாக
இருந்தால் இது போன்ற விபரீதம்
நடந்திருக்காது எல்லை பாதுகாப்பு
விஷயத்தில் இவ்வளவு மெத்தனம்
கூடாது. டெல்லியில் இருந்து
சென்னைக்கு இண்டிகோ
விமானத்தில் வந்த வில்சன் எம்பி
அவர்களின் லக்கேஜ் டெல்லி
விமான நிலையத்திலேயே
முடங்கி உள்ளது வருத்தமளிக்கிறது
விமான நிலையத்தில் இவ்வளவு
மெத்தனமாக உள்ளனர்
ஒரு எம்பி கே இந்த நிலை என்றால்
சாமானிய மக்களின் நிலை குறித்து
வருத்தமாக உள்ளது. கல்லீரல்
பற்றிய விழிப்புணர்வு கட்டுரை
உடல் பருமன் உள்ளவர்களுக்கு
ஒரு வரப்பிரசாதம். 100 நாள்
வேலை திட்டத்தில் மத்திய அரசு
2999 கோடி நிதியை விடுவித்து
இருப்பது மிக நீண்ட போராட்டத்துக்கு
பின்னர் கிடைத்த வெற்றியாகும்.
சீமான் தலை துண்டிக்கப்படும்
என இன்ஸ்டாகிராமில்
ஒருவர் பதிவு செய்துள்ளார்
சீமான் மீது என்ன கோபமோ
தெரியவில்லை. சின்னஞ்சிறு
கோபுவின் யானை பசி கவிதை
ஒரு நல்ல நகைச்சுவை. சபரிமலை
கோவிலுக்கு ஏன் பெண்கள்
செல்லக்கூடாது என்ற கட்டுரை
அதன் விளக்கம் அருமையாக
இருந்தது.ரவுசு மணி தத்துவம்
சிறந்த நகைச்சுவை. மத்திய
அரசின் விசாரணை அமைப்புகளை
கண்டு திமுக ஒரு போதும் அஞ்சாது
என ஸ்டாலின் கூறியிருக்கிறார்.
ஒருபுறம் திமுக அரசு
கொடிக்கம்பங்களை அகற்ற
உத்தரவு பிறப்பித்துள்ளது மறுபுறம்
திருமாவளவன் அதற்கு தடை கேட்டு
நீதிமன்றம் செல்வது வேடிக்கையாக
உள்ளது. அயோத்தியில் பாபர் மசூதி
கட்டுவதற்கு முதல் செங்கலை
நாங்கள் தான் வைப்போம்
என்ன பாகிஸ்தான் மேலவை
உறுப்பினர் பேசியிருப்பது
மீண்டும் சர்ச்சையை உருவாக்கும்
செயல். தினசரி புதுப்புது செய்திகளை
சுடச்சுட வழங்கும் தமிழ்நாடு இ பேப்பர்
குழுமத்திற்கு பாராட்டுக்கள்
ஒடிசாவில் இருந்து கொண்டு
இந்த டீம் இவ்வளவு சிறப்பாக
செயல்படுவது ஆச்சரியம்
அளிக்கிறது தமிழ்நாடு இ பேப்பர்
குடும்பத்திற்கு பாராட்டுக்கள்
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி