tamilnadu epaper

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-16.04.25

வாசகர் கடிதம் (நடேஷ் கன்னா)-16.04.25


முதல்வர் ஸ்டாலின் மீண்டும் 


மாநில சுயாட்சியை கையில் 


 எடுத்திருப்பது நல்ல முன்னேற்றம் 


பாளையங்கோட்டையில் எட்டாம் 


வகுப்பு படிக்கும் மாணவன் 


சக மாணவனிடம் பென்சில் கேட்டு 



 தராததால் அவனை அறிவாளால் 


வெட்டினான். வர வர நெல்லை 


கொலைக்களமாக மாறி வருகிறது. 



முருங்கைக்காய் மருத்துவ பலன் 


பற்றி குறிப்பிட்டது அருமை 


இதைப் பற்றி முந்தானை முடிச்சு 


 படத்தில் பாக்யராஜ் சார் 


அருமையாக விளக்கியுள்ளார் .



வசதி படைத்தவர்கள் வருமானத்தை 


குறைத்துக் காட்டி வருமானவரி 


 செலுத்துவதில் இருந்து 


வரி விலக்கு பெறுவது நியாயம் 


 இல்லை. ஏழைகளுக்கு ஒரு நீதி 


பணக்காரர்களுக்கு ஒரு நீதியா. 


இஸ்ரேலுக்கு 50,000 தொழிலாளர்கள் 


தேவை. உத்தரப்பிரதேசம் 


பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து 


இஸ்ரேலுக்கு வேலைக்கு 


 செல்கிறார்கள். வேலைக்கு போவது 


சரி. சண்டை வந்தால் ஹமாசுடன்


சண்டை போட தயாராக இருக்க 


 வேண்டும். சுற்றுலா பயணம் 


கட்டுரையில் காஞ்சிபுரம் 


சுற்றியுள்ள கோயில்கள் பற்றிய 


விவரம் அற்புதம். சபரிமலையில 


முதல் நாளில் 100 தங்க டாலர்கள் 


விற்பனை. கல்லூரியில் படிக்கும் 


திருநங்கைகள் திருநம்பிகள் 


தங்கி படிக்க தனித்தனி விடுதிகள் 


வேண்டுமென கோரிக்கை 


வைத்து உள்ளனர். நியாயமான 


 கோரிக்கை. நேஷனல் ஹெரால்டு 


பத்திரிகை வழக்கில் சோனியா 


ராகுலுக்கு குற்றப்பத்திரிகை 


வழங்கப்பட்டது . அமலாக்கத்துறை 


நடவடிக்கை. மத்திய அரசு 


அடுத்த கட்ட நடவடிக்கையில் 


இறங்கி விட்டார்கள். அமெரிக்காவில் 


இருந்து போயிங் ஜெட்


 விமானங்களை வாங்க சீனா 


மறுத்துவிட்டது. 125 சதவீதம் 


வரி போட்டால் யார் வாங்குவார்கள். 


சிங்கப்பூரில் தனியார் நிறுவனம் 


அங்கு வேலை பார்க்கும் ஊழியரை 


சரிவர நடத்தாததால் அந்த ஊழியர் 


டிஷ்யூ பேப்பரில் ராஜினாமா கடிதம் 


கொடுத்து அந்த நிறுவனத்தை 


பழிவாங்கியுள்ளார். 60 ஆயிரம் 


ஆப்கானிஸ்தானியர்கள்


நாடு கடத்தப்பட்டனர். 


புது புது கவிதைகள் கட்டுரைகள் 


ஆன்மீக செய்திகள் உள்ளூர் 


 செய்திகள் திருவிழாக்கள் பற்றிய 


 விவரம். சமையல் கலை டிப்ஸ் 


என்ன பல தரப்பு மக்களையும் 


சென்றடைகிறது தமிழ்நாடு இ பேப்பர் 


ஒவ்வொரு பக்கத்தையும் வரி 


 விடாமல் படிக்கத் தோன்றுகிறது 


20 பக்கமும் 2000 பொக்கிஷங்கள் 


நிறைந்ததாக உள்ளது


-நடேஷ் கன்னா

கல்லிடைக்குறிச்சி