உள்ளாட்சி அமைப்புகளில்
நியமன முறையில்
மாற்றுத்திறனாளிகள்
நியமிக்கப்படுவார்கள் நல்ல
யோசனை. திருப்பதி கோவிலில்
பௌர்ணமி கருட சேவை ரத்து
செய்யப்பட்டுள்ளது வேதனை
அளிக்கிறது. அகத்திக் கீரையில்
50க்கும் மேற்பட்ட சத்துக்கள்
இருப்பது தங்கள் கட்டுரை மூலம்
தெரிய வருகிறது. ஹச் ஒதுக்கீடு
ரத்து செய்யப்பட்டுள்ளது
கண்டிக்கத்தக்கது. அதிமுக பாஜக
கூட்டணியில் இன்னும் பல கட்சிகள்
இணையும் என பழனிச்சாமி
ஆருடம் கூறியுள்ளார். தர்பூசணியில்
ஊசி மூலம் நிறமாற்றும்
வித்தையை தமிழர்கள் கண்டுபிடித்து
இருப்பது வேடிக்கையாக உள்ளது.
நந்தி தேவருக்கு குறுக்கே
செல்லக்கூடாது என்ற கட்டுரை
விளக்கம் அருமையாக இருந்தது.
கிட்டத்தட்ட 30 புதுக்கவிதைகள்
தொகுப்பு அடங்கிய பெட்டகமாக
இருந்தது. சிறப்பானதாக உள்ளது
வெற்றிலை கஷாயம் நுரையீரல
பாதுகாக்கும் என்பது நிஜமான
உண்மை. இனி தமிழ் மூலம்
மட்டுமே அரசாணை வெளியிடப்படும்
என்ற அரசின் அறிவிப்பு
வரவேற்கத்தக்கது.
அண்ணாமலைக்கு பாஜக
இளைஞர் பிரிவு தலைவர்
வழங்க இருப்பது இளைஞர்களுக்கு
நல்ல ஊக்கமாக இருக்கும்.
ஆஸ்பத்திரியில் பச்சிளம்
குழந்தைகள் காணாமல் போனால்
ஆஸ்பத்திரி உரிமம் ரத்து
செய்யப்படும் இந்த அரசின் அறிவிப்பு
வரவேற்கத்தக்கது.
மாட்டுத்தாவணி பேருந்தில்
நூலகம் அமைப்பது அனைத்து தரப்பு
மக்களுக்கும் நல்ல பொழுதுபோக்கு
அம்சமாக இருக்கும். காங்கிரசால்
மட்டுமே ஆர் எஸ் எஸ் பாஜகவை
வீழ்த்த முடியும் என்ற ராகுல் பேச்சு
அபத்தமாக உள்ளது. இந்து
அறக்கட்டளைக்கு முஸ்லிம் நபர்களை
உறுப்பினராக நியமிக்க முடியுமா என
உச்சநீதிமன்றம் கேட்டு இருப்பது
நெற்றிபொட்டில் அறைந்தார் போல்
உள்ளது. 2025 ஏப்ரல் வரை
85 ஆயிரம் இந்தியர்களுக்கு
சீனா விசா வழங்கியுள்ளது
ஒரு பக்கம் அமெரிக்கா இந்தியர்களை
வெளியேற்றிக் கொண்டிருக்கிறது
சீனா ஆதரவு கரம் நீட்டுவது
ஆறுதலாக உள்ளது.
-நடேஷ் கன்னா
கல்லிடைக்குறிச்சி