வணக்கம்
11.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்ட ராணா ராணுவத்தில் வேலை செய்த மருத்துவர். மருத்துவராக இருந்து கொண்டு எப்படி தீவிரவாத செயல்களில் ஈடுபட முடிந்ததோ?
பாரதிய பாஷா விருது பெறும் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். வாழ்த்து தெரிவித்த முதல்வருக்கு நன்றி.
தமிழகத்தில் சிறுதொழில் நிறுவனங்களுக்கான முதலீட்டு மானிய உச்ச வரம்பை பத்து லட்சமாக உயர்த்தியதற்கு பாராட்டுகள். அவர்களின் தொழில் விரிவடைய இது பேருதவியாக அமையும்.
தொழிலாளர் நல விரோதச் சட்டங்களை அமல்படுத்த மாட்டோம் என்று உறுதிபடுத்திய அமைச்சருக்கு பாராட்டுகள்.
ஶ்ரீரங்கத்தில் சேர்த்தி சேவை வரும் வருடத்தில் எப்படியாவது போய் சேவிக்கும் ஆர்வத்தை தூண்டியது.
தினம் ஒரு தலைவர்கள் வரிசையில்
பரலி.சு. பற்றிய கட்டுரை அந்நாரின் பெருமையை பறைசாற்றியது. கோவை சிறைச்சாலையில் வஉசி அடைக்கப்பட்ட போது அங்கு செக்கிழுத்து கஷ்டப்பட்டதையும் கடுமையான சிறைச்சித்திரவதை அனுபவத்தையும் உலகுக்கு காட்டியவர் பரலி.சு. நெல்லையப்பரே. சீட்டுக்கவி மூலம் வஉசியும், நெல்லையப்பரும் பேசிக்கொள்வதுண்டு. பாரதியாருக்கு புரவலர்.
பிறவிப்பிணி தீர்க்க ஒருமுறை குற்றாலம் சென்று குற்றலநாதரையும் குழல்வாய்மொழி அம்மையையும் தரிசித்து வருவோம்.
மனக்கஷ்டங்கள் நீங்க எளிமையான பரிகாரங்கள் கட்டுரை சிறப்பு. இனி கவலை துறப்போம்.
திருச்சி மாவட்டம் மருங்காபுரியில் சமண தீர்த்தங்கரர் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்த இடத்தில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட.வேண்டும்.
ஜிப்லி இலவச செயலியால் ஆபத்து என்கிற சைபர் கிரைமின் எச்சரிக்கையை கவனத்தில் கொள்ள வேண்டும்.
-தாணப்பன் கதிர்
( ப. தாணப்பன் )