tamilnadu epaper

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-17.04.25

வாசகர் கடிதம் (ப. தாணப்பன்)-17.04.25

வணக்கம்


     17.04.2025 'தமிழ்நாடு இ பேப்பர். காம்' வழக்கம் போல் அனைத்துச் செய்திகளையும் தாங்கிய நாளிதழாக வெளிவந்திருக்கிறது.


  

...உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகள் என்ற அறிவிப்பு வரவேற்கத்தக்கது. மேலும் தனியார் நிறுவனங்களில் பணி அமர்த்தப்பட்டால் இரண்டாயிரம் ரூபாய் ஊதிய மானியம் என்கிற அறிவிப்பு கூடுதலாக தனியார் நிறுவனங்களில் பணி அமர்த்த உதவும். அந்த மானியத்தை அவர்களுக்கு வழங்க வேண்டும்.


  தமிழில் மட்டுமே அரசாணைகள் வெளி இட வேண்டும் என்பது வரவேற்கக்கூடிய ஒன்று.


  சென்னை மெட்ரோ ரயில்களில் அதிகரிக்கும் கூட்டத்திற்கேற்ப அந்தந்த வழித்தடங்களில் கூடுதல் பெட்டிகளை இணைக்க வேண்டும்.


    ஊசி மூலம் நிறம் என்கிற ஊடக வதந்தி தற்போது வெயில் காலத்தின் தேவையான தர்பூசணி விவசாயிகளின் வாழ்வாதரத்தை பாதித்துள்ளது. உண்மைத்தன்மை தெரியாது வந்ததை எல்லாம் பரப்பும் எண்ணத்தை கைவிட வேண்டும். எத்தகைய பாதிப்பை உண்டாக்கி இருக்கிறது என்பதை உணர வேண்டும்.


  நந்திதேவரின் மகிமை மற்றும் நந்தி தேவரின் குறுக்கே செல்லாதிருக்க வேண்டியதன் விளக்கமும் சிறப்பு. ஜீவாத்மா பரமாத்மாவை சென்றடைய வேண்டும் என்பதை உணர்த்தும் தத்துவம் இது.


  கக்கன் அவர்கள் பற்றிய கட்டுரை அன்னாரின் பெருமையை பறைசாற்றியது. கக்கனைப் போன்ற தன்னிகரற்ற தலைவரை இனி காண்பது அரிது.


  வெற்றிலைக்கசாயம் சிறந்த மருந்து.


  தேனிமாவட்டத்தில் பார்க்க அவசியம் வேண்டிய இடங்களின் பட்டியல் சுற்றுலா செல்பவர்களுக்கு சிறந்த வழிகாட்டி.


    அமெரிக்காவிற்கும் சீனாவிற்குமான பனிப்போர் நிறுத்தப்பட வேண்டும். மூன்றாம் உலகப்போருக்கு வித்தாக அமைந்து விடக்கூடாது.



-தாணப்பன் கதிர்

( ப. தாணப்பன் )