tamilnadu epaper

வாசகர் கடிதம் (ம.முத்துக்குமார்)-16.04.25

வாசகர் கடிதம் (ம.முத்துக்குமார்)-16.04.25

சிறுகதைகள் அருமை. வீட்டு வேலைக்காரியின் வார்த்தைகளில் வாழ்வில் எவரையும் குறைசொல்லாது தம்மாலான உதவிகளோடு வாழ்வை அர்த்தப்படுத்திக்கொள்ளுதல் உறவுகள் பலம்பெற எவ்வளவு உறுதுணையாய உள்ளது என தெளிவுபடுத்தியமைக்கு நன்றி. மேலும் பெய்த மழை தொடரில் இயல்பான வாழ்வின் நிகழ்வுகளை கிராமிய மணம்கமழ பகிர்ந்தமை அற்புதம். பென்சிலுக்காக என்ற பெயரில் முன்விரோதத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் அரிவாளால் வெட்டிய செய்தி தலைகுனிவாக இருந்தது. பள்ளிக்கு அரிவாள் கொண்டு செல்லும் குரூர குணத்தை சொல்லிக்கொடுக்கும் ஆயுத கலாச்சாரம் மாணவர்கள்வரை பரவிக்கிடப்பது பெரும் வேதனை. இணையமும் திரைப்படங்களும் சீரியல்களும் கற்றுத்தருவதில் பங்காற்றுவது ஆபாசத்தையும் வன்முறையையும் என நினைக்கும்போது சந்ததிகளின் எதிர்காலம்குறித்து கேள்வி எழுப்புகிறது. மொழிப்பற்று வேண்டும் அதே சமயம் உலகளாவிய பொதுமொழியில் நல்ல பரிச்சயம் மாணவர்களுக்கு இருப்பதும் முக்கியம். ஏனைய பிறமொழிகள் கற்பது அவரவர் விருப்பம். வேண்டாம் என முட்டுக்கட்டை போடுவதும் அதை வைத்து அரசியல் செய்வதும் வெட்கக்கேடானது. அனைத்துக்கும் ஆதிமொழி அமிர்தமொழி தமிழ்மொழி என்பதில் பெருமை கொள்வோம். நன்றி.


-ம.முத்துக்குமார்