அரூர் மதிவாணன் எழுதிய
" தப்புக்கணக்கு " ஆட்டோ ஓட்டுநர் சொன்னது போல, தனியே வரும் பெண்கள் பொதுவெளியில் அதிக "நகைகளை" அணிந்து வருவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் "சங்கிலி பறிப்பு " தொடர்கதையாக நடைபெறும் இந்த காலகட்டத்தில்.
சிவ.முத்துலட்சுமணன்
எழுதிய "விறன்மீண்டார்" நாயனார் வரலாறு அடியவர் புகழை உயர்த்த அந்த சிவனே அவதாரம் எடுத்து வருவார் என்பதை உணர்த்தியது.
சரவணன் எழுதிய " ஸ்ரீரங்கம் சேர்த்தி சேவை" நன்னாளில் பெருமாள்- தாயார் சேர்த்தியில் மகிழ்ந்த இருக்கும் போது வேண்டியது அனைத்தும் கிடைக்கும் என்கிறார்.அரங்கன் அருளைப் பெற்று உய்வோம்.
-ஸ்ரீகாந்த்
திருச்சி