விடிந்தால் புத்தாண்டு. நண்பனைப் பார்த்து வரலாம் என்று அவன் வீட்டுக்குப் போனேன். நண்பனிடம் அவன் மனைவி ஏதோ சீறிக் கொண்டிருந்தது என் காதுக்களில் வந்து பீறிட்டது..!
"இந்தபிஸ் கட்டை எந்தக் கடையில வாங்கிட்டு வந்தீங்க... எல்லாம் நொறுங்கி கிடக்கு... போய் மாத்தி நல்லதா வாங்கிட்டு வாங்க....! "
"எங்க...கொண் டா பாப்போம்... காசு கொடுத்து வாங்கினேனா
சும்மாவா..."! என்று வீரமாய் பேசியபடியே நண்பன் வெளியே வர நான் உள்ளே சென்றேன். என்னைக்க் கண்டதும் முகமலர்ச்சியோடு வரவேற்றபடியே மனைவியைக் கூப்பிட்டான் நண்பன்.
" வேணாம்... வெளிய தானே கெளம்பிட்ட... வா பேசிக்கிட்டே போவோம்...என்றேன் " இருவரும்பேசிகொண் டே நடந்தோம்.!!
வழியில் ஒரு வயதான பாட்டி வந்தார். பாட்டியைப் பார்த்ததும் நண்பன் பிஸ்கட்டை எடுத்துஅவரிடம் கொடுத்தான். அவர் கை கூப்பி முகம் மலர்ந்தார்.
"பாவம் மகனிடம் பிச்சை சோறு வாங்கி சாப்பிடுகிறது" என்றான் நண்பன்...!
."முத்து உன்னுடைய காதல் கவிதைகள் எல்லாம் மிகவும் அருமை யாக இருக்கிறது " என்றான் நண்பன் . என் நினைவெல்லாம் பிஸ்கட் பாக்கெட்டிலேயே இருந்தது. இருவரும் தேநீர் கடையில் தேனீர் அருந்தினோ ம்.நண்பன் அதே போன்ற பிஸ்கட் பாக்கெட் ஒன்றை வாங்கிக் கொண்டான். மனைவியிடம் கொடுக்க வேண்டுமே ...!
போன புத்தாண்டு...! என் மனைவி அழுகிய தேங்காயை வாங்கிய கடையிலேயே கொடுத்து மாற்றி வரும்படி கூற,அது எப்படி... நியாயமில்லையே என்று நான் மறுக்க... அவள் எதிர்க்க...!வார்த்தைகள் சிலம்பம் ஆட...! அப்போதே கானல் வரி தொடங்கி விட்டது !! மூன்று நாள்ட்கள்... இருவரும் பேசாமல்இருந்தோம். யாரு மெள நத்தை உடைப்பது என்ற கெளரவ ப் பிடிவாதம் அந்தக்
கசப்பான புத்தாண்டு நினைவுகள் இன்னும் என் மனதில் உறுத்திக் கொண்டிருக் கிறது...!!
,
இன்று நண்பன் ஓர் அழகான
வாழ்க்கைப் பாடத்தை அல்லவா
எனக்கு கற்பித்திருக்கிறான்!
===============
-குடந்தை பரிபூணன்.