tamilnadu epaper

வாழ்வினிய ஆசான்..

வாழ்வினிய ஆசான்..

நிம்மதியைத்தேடி 
கடந்துகோண்டிருக்கிறான்
ஒருவன்..

நானவனிடம் என்
பயணத்தின் 
பாதையைக்கேட்கிறேன்..

கைகளை நீட்டி
உடல்மொழி பாவித்து
சுட்ட சட்டியின் கைவிட்ட பாதையை சுட்டிக்காட்டுகிறான்.. 

ஏறாத மலமேல
பழுத்திருக்கும் இலந்தையினை
தனக்கென பறித்துவரும்படி கேட்கிறான் அவனென்னிடம்..

காட்சிகளின் நீட்சியில்
உள்ளத்தின் நல்லுள்ளமென
தாரை வார்த்துத்தருகிறான் தன்னனுபவத்தை எனக்கு..

இருட்டு ஆரம்பிக்க
குருட்டு அன்பு மிக்கவனாக
ஒளிமயமான எதிர்காலங்குறித்தோர் ஆலோசனை சொல்கிறானவன்..

பிரமித்து நின்ற என்னிடம்
பாதையின் பயணம் நிறுத்தி
ஓர் நிழலென மட்டும் மாறி அமைதியான நதியினிலோர் ஓடம் வைத்து கடந்துவிட.. 

அவனின் ஆலோசனைகளும் அனுபவங்களும் திரையினில்
கற்றுத்தந்தாலும் நிசத்திலும் நிச்சயமாக
போதிக்க நிச்சயம் பயணிக்கிறோம் எங்களுக்கும் வாழ்வுவருமென்று..!

#ஆர்_ஜவஹர்_பிரேம்குமார். 
#பெரியகுளம்.