ஒரே ஒரு விருது திறமைக்கு கிடைக்க வேண்டும்.. திறமையை மென்மேலும் திறனூன்றி கற்கவேண்டும்.!
ஒரு பைசா வாங்காமல் விருது எவரும் கொடுப்பாரோ? ஒன்று கொடு.. ஒன்று பெறு.. நிலை இன்று மாறாதோ?
தாங்குகிற நிலம் இதனைத் தா என்று கேட்கிறதா.. பொழிகின்ற மேகங்கள் போடு என்று கேட்கிறதா! வழிகின்ற நதியெல்லாம் வழிச்செலவை கேட்கிறதா.. விருதுதர கேட்கின்றார்! படைப்பாளர் என்னசெய்வார்?
கொடுத்துக் கிடைக்கின்ற விருதெல்லாம் வெங்காயம்! எழுத்தால் கிடைக்கின்ற அவமானம் வெகுமானம்! பொறுத்து கொண்டு தொடர்ந்து எழுதுபவர் எழுத்தாளர்! மதித்து மனம்கனிந்து பணமின்றி திறமைக்கு கொடுத்தார் என்றால் அது விருது.!
-வே.கல்யாண்குமார்