நாசாவில் ஒன்பது மாதங்கள்
மாசாக தங்கி வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் என்ற வீரமங்கையே உன்னுடைய பொறுமைக்கும் சாதுரியத்திற்கும் ஒரு ராயல் சல்யூட்
தாயின் கருவறையில் பத்து மாதம் இருந்து விட்டு வெளியே வந்த சேயின் முகத்தை பார்க்கும்போது தாய் அடையும் மகிழ்ச்சியை
போல்......
இந்திய தாய் சுனிதா வில்லியம்ஸ் என்ற சேயின் முகத்தைக் கண்டு பரவசம் அடைந்தது என்னவோ உண்மைதான்....
சூரியன் கூட சிறைக்குள் போக,
சுடர் வெண்ணிலா விழிக்க என்று வானுலகம் சூரியனையும் நிலாவையும் ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் அதில் பல நாள் தங்கி விட்டு மங்காத உள்ளத்துடன் வெளியே வந்த சுனிதா வில்லியம்ஸ் வீரமங்கையின்
வீர தீர செயலை பார் புகழ்வது வியப்பில்லையே
இரும்பாய் நின்றாள் வீரமங்கை,
கரும்பாய் இனித்தாள் உலக மக்களுக்கு....
சத்தமில்லா சக்தி அவளடி,
சகலத்திற்கும் பிடித்த அந்த மங்கையை
சொந்தமான சொல்லி மகிழ்ச்சியில் திளைக்க வைப்போம்.
-உஷா முத்துராமன்