வாழ்வில் துவண்டு போய் கிடந்த ராஜனை உற்சாகப்படுத்த வேண்டும் என எண்ணினான் ரமேஷ்
"ஏன்டா ராஜன் என்ன கப்பலா கவிழ்ந்துடுச்சு செய்யற தொழில்ல லாப நஷ்டம் வருவது சகஜம் அதுக்காக ஏன்டா உடைஞ்சு போய் ரொம்ப வருத்தமா இருக்க" என்றான்
ராஜன் பேசினான் "எந்தத் தொழில் செய்தாலும் நஷ்டம் எத்தனை பேர் கிட்ட தான் கடன் வாங்குவது வாழ்க்கையே விரக்தியாக இருக்கிறது" என்றான்
"உனக்கு எந்த தொழில் எந்த செயல்பாடுகள் முழு திருப்த்தி அளிக்கிறதோ அதில் முழு ஈடுபாட்டுடன் செய் பணம் உன் பின்னாடி நாயை போல் வாழாட்டிக் கொண்டு வரும்" என்றான்
"கொஞ்சம் புரியும் படியா சொல்"
"இப்ப என்னையே எடுத்துக்கோ எனக்கு பிடித்தது கதை எழுதுவது தொடர்ந்து எழுதினேன் காசு கிடைக்கவில்லை காசுக்காக எழுதவில்லை என்னுடைய மன திருப்திக்காக பசி பட்டினியிலும் விடாமல் தொடர்ந்து எழுதினேன் ஆத்மார்த்தமாய் எழுதினேன் நீ கூட என்னை பைத்தியம் என்றாய் "
"ஆமா எப்ப பாரு எழுதிட்டே இருப்ப போர் அடிக்காதா அதில் அப்படி என்ன வருமானம் உனக்கு கிடைச்சிடும்"
"எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பத்திரிக்கையில் எழுதின என் கதைகளில் ஒன்றை வாசித்த சினிமா இயக்குனர் சிவன் அவர்கள் இப்பொழுது என் கதையை படமாக்க அனுமதி கேட்டு இருக்கிறார் நான் அவருக்காக எழுதவில்லை என் மனத் திருப்திக்காக எழுதினேன் பணத்துக்காக நான் எழுதவில்லை இப்பொழுது பணம் என் கைகளை நோக்கி வருகிறது புகழை நான் தேடவில்லை அது என்னை தேடி வருகிறது" என்றேன் அவன் கண்கள் ஆச்சரியத்தில் விரிந்தது
"நீ சொல்றது ஆச்சரியமா இருக்கு"
"ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை உனக்கு பிடித்தது உன் மனதிருப்திக்காக நீ செய்யும் வேலை அற்பமாக இருந்தாலும் அதை விடாமல் செய் ஒருநாள் அது உனக்கு முடிசூட்டும் பணத்தை அள்ளித் தரும் அதனால் பணத்துக்காக எதையும் செய்யாதே செய்ய வேண்டியதை விருப்பத்தோடு இசை பணம் உன் பின்னே வரும்" என்றேன்
இதைக் கேட்டு தன்னை மாற்றிக் கொண்ட ராஜன் மனதில் முழு திருப்தியோடு வாழ்வில் துவண்டு போன பலருக்கு இப்பொழுது மோட்டிவேஷனல் கிளாஸ் எடுத்துக் கொண்டிருக்கிறான்
கவிமுகில் சுரேஷ்
தருமபுரி