வேலூர், மே 28-
வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. வேலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் 1434ஆம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கடந்த 21ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி நிறைவு பெற்றது. இந்த நிறைவு விழாவில் தென் வேலூர், வட வேலூர், அரியூர், தொரப்பாடி, அல்லாபுரம் ஆகிய பகுதிகளுக்கான ஆண்டு வருவாய் தீர்வாயம் ஜமாபந்தி நடந்தது இந்த ஜமாபந்தி அலுவலராக வேலூர் வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன் கலந்து கொண்டு பொது மக்களுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கி சிறப்பித்தார். இந்த ஜமாபந்திக்கான அனைத்து ஏற்பாடுகளையும் வட்டாட்சியர் செய்திருந்தார். பொதுமக்கள் கொடுத்த பல்வேறு மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. சில மனுக்கள் பரிசீலனையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.இந்த மனுக்கள் விரைவில் பரிசீலனை செய்து பொதுமக்களுக்கு தரப்படும் என்று வட்டாட்சியர் இல.வடிவேலு தெரிவித்துள்ளார். வேலூர் வட்டாட்சியர் இல. வடிவேலு மற்றும் வருவாய் அலுவலர்கள் கிராம நிர்வாக அலுவலர்கள் கிராம உதவியாளர்கள் மற்றும் பொதுமக்கள் விவசாய சங்க பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.