tamilnadu epaper

ஹைக்கூ

ஹைக்கூ


வெட்டப்படுவதற்காக

கால்கடுக்க நிற்கின்றன.

உயர்ந்த மரங்கள் 


கட்டப்பட்டது

கட்டும்பட்டது

சிற்றிலக்கியம்


குப்புறத்தள்ளினேன்

உட்காரச்சொன்னது

ஆட்டுக்கல்


மனம் சிறக்க

மண் செழிக்க

வடிகால்


எப்படி ஏறின

இத்தனைக் காளைகள்

கோயிற்கோபுரம்

 

-மு. பழனித்துரை,

  அறந்தாங்கி.