அதிமுக ஊழல் கட்சி என்றால் செங்கோட்டையனை எதற்காக சேர்த்தார்?” - விஜய்க்கு தினகரன் கேள்வி

அதிமுக ஊழல் கட்சி என்றால் செங்கோட்டையனை எதற்காக சேர்த்தார்?” - விஜய்க்கு தினகரன் கேள்வி


 

அ​தி​முக-வை ஊழல் கட்சி என்று சொல்​லும் விஜய், 2021 வரை அதி​முக ஆட்​சி​யில் அமைச்​ச​ராக இருந்த செங்​கோட்​டையனை தவெக-​வில் எதற்​காக சேர்த்​துக் கொண்​டார்?” என அமமுக பொதுச்​செய​லா​ளர் டிடி​வி.​தினகரன் கேள்வி எழுப்​பி​னார்.


இதுகுறித்து நேற்று அவர் மதுரை​யில் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: நானும் செங்​கோட்​டைய​னும் கடந்த 1986-ம் ஆண்​டிலிருந்தே நண்​பர்​களாக பழகி வரு​கி​றோம். அவர் தவெக-வுக்கு போவதற்கு முன்​பும் என்​னிடம் கூறிச் சென்​றார். அந்த அடிப்​படை​யில் தவெக கூட்​ட​ணிக்கு நான் வரவேண்​டும் என அவர் விருப்​பப்​பட்​டார். அவர் என்னை விட சீனியர் என்​ப​தால், அவரது அழைப்பை மறுக்க முடி​யாமல் தயங்​கித் தயங்கி வரவில்லை என்று சொல்​லாமல், “பார்த்​துக் கொள்​வோம்” என்​றேன்.


தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைவதற்கு முன் டெல்​லிக்கு சென்று வந்​த​பிறகு செங்​கோட்​டைய​னிடம் பேசினேன். பாஜக முக்​கிய தலை​வர்​கள் உங்​களைக் கேட்​டார்​கள் என்ற தகவலைக் கூறினேன். ஆனால் அவரோ, “அது எனக்கு சரி​வ​ரா​துங்க” என்று கூறி​விட்​டார். அவர் நான் தவெக கூட்​ட​ணிக்கு வரு​வேன் என்று உறு​தி​யாக நம்​பி​னார். நான் சூழ்​நிலை காரண​மாக தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணை​ய​வில்​லை.


மேலும், நான் தேர்​தலில் போட்​டி​யிடக் கூடாது என்று சொன்​ன​தாக​வும் கூறுகி​றார்​கள். இன்று நினைத்​தா​லும் தேர்​தலில் போட்​டி​யிடு​வேன். கட்​சிக்​காரர்​கள் வலி​யுறுத்​தி​னால் என் முடிவை மாற்​றப்​போகிறேன். முடி​வெடுத்​தால் போட்​டி​யிடக் கூடாது என்​பது சட்​ட​மா? எனக்கு யாரும் அழுத்​தம் கொடுக்க முடி​யாது. உத்​தர​விட​வும் முடி​யாது.


அரசி​யல் என்​பது சதி நிறைந்த துறை. தேவை​யில்​லாத சகுனிகள், கூனிகள் இருப்​பார்​கள். அதை​யும் தாண்டி ஆரோக்​கிய​மான நட்பு வேண்​டும். ஒரு ஆரோக்​கிய​மான ஆட்சி அமைய​வேண்​டும், ஜெயலலிதா ஆட்சி அமைய வேண்​டும் என்​ப​தால் தான் நான் இணைந்​தேன். பழனி​சாமி​யும் நான் இந்த கூட்​ட​ணிக்கு வர வேண்​டும் என்று விருப்​பப்​பட்​டார். அதி​முக-வை ஊழல் கட்சி என்று சொல்​லும் விஜய், கடந்த 2021 வரை அதி​முக ஆட்​சி​யில் அமைச்​ச​ராக இருந்த செங்​கோட்​டையனை தவெக-​வில் எதற்​காக சேர்த்​துக் கொண்​டார்? எனவே, தவெக-​வின் நிலைப்​பாடு என்​பது என்ன என்​பதே புரிய​வில்​லை. வரும் தேர்​தலில் என்​டிஏ-வுக்​கும் திமுக கூட்​ட​ணிக்​கும் தான் போட்டி இருக்​கும். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.


“நாங்​கள் கூட்​டணி பற்றி எந்​தக் கட்​சி​யுடன் பேசி​னாலும் டெல்​லி​யில் இருந்து வந்​து​விடு​கி​றார்​கள்” என்று செங்​கோட்​டையன் சொல்லி இருக்​கி​றாரே என்று செய்​தி​யாளர்​கள் கேட்​டதற்​கு, ‘‘உங்​களுக்கு ஏதாவது செய்தி கிடைக்​காதா என்று பார்ப்​பீர்​கள். செங்​கோட்​டைய​னும் தான் பல முறை டெல்லி சென்று மத்​திய அமைச்​சர்​களைச் சந்​தித்​தார். அப்​படி​யென்​றால் அவருக்கு அழுத்​தம் இருந்தா டெல்லி சென்​றார். அவருக்கு இல்​லாத அழுத்​தம் எங்​களுக்கு மட்​டும் எப்​படி வரும்? அதெல்​லாம் ஆயிரம் சொல்​வார்​கள். நான் சூழ்​நிலை காரண​மாக​வும் அழுத்​தம் காரண​மாக​வும் தேசிய ஜனநாயகக் கூட்​ட​ணி​யில் இணைந்​தேன் என்று செங்​கோட்​டையன் சொல்​லி​யிருக்க வாய்ப்​பில்​லை’’ என்​றார்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%