அதிமுக, பாஜக கூட்டணி, மகிழ்ச்சியாக ஆரோக்கியமாக உள்ளது- தமிழிசை

அதிமுக, பாஜக கூட்டணி, மகிழ்ச்சியாக  ஆரோக்கியமாக உள்ளது- தமிழிசை


சென்னை, ஆக. 5-

அதிமுக, பாஜக கூட்டணி மகிழ்ச்சியாக உண்டு ஆரோக்கியமாக உள்ளதுஎன்று தமிழிசை கூறினார்.

சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று அளித்த பேட்டி- தூத்துக்குடியில் வின் ஃபாஸ்ட் ஆலையில் உற்பத்தி செய்யப்பட்ட முதல் காரை முதலமைச்சர் விற்பனைக்கு தொடங்கி வைக்கிறார். இதற்கு அடிப்படை காரணமாக இருப்பவர் பிரதமர். அவரால் தான் தூத்துக்குடி விமான நிலையம், துறைமுகம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டன. இந்த விரிவாக்கம் செய்யப்பட்டதால் தான் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும், மற்ற நிறுவனங்களுக்கும் தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வந்துள்ளது.

ஆரோக்கிய கூட்டணி

அதிமுக - பாஜக தலைவர்களுக்கு இடையே சுமுகமான உறவு உள்ளது. அதற்கு சான்று நேற்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் அதிமுகவுக்கு அளித்த விருந்து. நேற்றைய விருந்தில் பாரம்பரிய சிறு தானியங்கள் முதல் வெளிநாட்டு உணவு வகைகள் வரை இடம் பெற்றன. மகிழ்ச்சியாக உண்டு ஆரோக்கியமான கூட்டணியில் உள்ளோம். ஆனால் திமுக, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளுக்கு தான் இந்த விருந்ததை பார்த்து ஜீரணிக்க முடியவில்லை. அவர்கள் பாஜக - அதிமுக கூட்டணி குறித்து என்ன பேசினாலும் எங்களுக்கு கவலை இல்லை. 

• பீகாரில் மேற்கொள்ளப்பட்டுள்ள சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தம் பற்றி …?

6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழகத்திற்கு வந்து விடுவார்கள் என்று ப.சிதம்பரம் கூறுவது பொய்யான தகவல். தேர்தல் ஆணையமும் ப.சிதம்பரத்தின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. வெளிநாட்டிலிருந்து வந்து பிரியங்கா காந்தி எப்படி வயநாட்டில் தேர்தலில் நின்றார். வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் அவரவர் இருக்கும் மாநிலங்களில் வாக்கு செலுத்துவதில் என்ன தவறு?

இவ்வாறு அவர் கூறினார்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%