news Breaking News
clock

அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைத்தால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி

அனுமதியின்றி கொடிக்கம்பம் அமைத்தால் நடவடிக்கை - சென்னை மாநகராட்சி


 

சென்னை,


சென்னையில் அனுமதியின்றி தற்காலிக கொடிக்கம்பம், சிலைகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தேர்தல் பரப்புரை, மாநாட்டிற்காக தற்காலிக கொடிக்கம்பங்கள் மற்றும் சிலைகள் அமைக்க அனுமதி பெற வேண்டும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.


முன்னதாக அரசியல், மத, சங்கங்களின் நிகழ்ச்சிகளில் கொடிக்கம்பங்கள் நட வழிமுறைகள் நெறிமுறைகள் வெளியிடப்பட்டது. இதன்படி கொடிக்கம்பங்கள் நட சென்னை மாநகராட்சி இணையதளத்தில் பதிவு செய்வது கட்டாயம் என்றும், மதச்சார்பான நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 7 நாட்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மதச்சார்பில்லாத நிகழ்வுகளுக்கு கொடிக்கம்பங்கள் நட 3 நாட்கள் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்றும், கொடிக்கம்பங்கள் நட உதவி ஆணையர் அனுமதியளித்த பின் எஸ்.எம்.எஸ். மூலம் தகவல் அனுப்பப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.


இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது;-


“தமிழ்நாட்டில் புதிய சிலைகள்/கொடி கம்பங்களை நிறுவுவதற்கான செயல்முறை மற்றும் நடைமுறையை தரப்படுத்துதல்; நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகள் மற்றும் வருவாய்த் துறையில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைக் கருத்தில் கொண்டு, ஏற்கனவே உள்ள சிலைகளை மாற்றுதல் மற்றும் இடமாற்றம் செய்தல் குறித்து விரிவான வழிகாட்டுதல் நெறிமுறைகளுடன் தமிழ்நாடு அரசால் ஆணை (வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அரசாணை எண்.629 நாள். 16.09.2025ல்) வெளியிடப்பட்டுள்ளது.


இதில் தனியார் நிலங்களில் புதிய சிலைகள் நிறுவுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், தனியார் நிலங்களில் புதிய கொடிக் கம்பங்கள் நிறுவுதற்கான வழிகாட்டு நெறிமுறைகள், சிலைகள் மற்றும் கொடிக் கம்பங்களை மாற்றி அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கூட்டம், தேர்தல் பிரச்சாரம், மாநாடுகள், ஊர்வலங்கள், தர்ணா, விழாக்கள் போன்ற சிறப்பு நிகழ்வுகளில் தற்காலிக கொடிக் கம்பங்களை அமைப்பது ஆகியவற்றிற்கு 4 வழிகாட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டுள்ளது.


இதற்காக சென்னை மாவட்டத்தில், மண்டல அளவிலான துணைக் குழு (Zonal Level Sub-Committee) அமைக்கவும் G.O. (M.s) No.57, Revenue & Disaster Management LD4(1) Department, Dated:20.01.2026 அரசாணையில் தெரிவிக்கப்பட்டு அதன்படி பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 வரையிலான ஒவ்வொரு மண்டலத்திலும் மண்டல உதவி ஆணையர் அவர்களை தலைவராகக் கொண்டு ஒரு மண்டலத்திற்கு ஒரு துணைக் குழு வீதம் 15 மண்டலங்களுக்கு 15 மண்டல அளவிலான துணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.



Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%

Recent News