அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி பேச்சுவார்த்தை

அமெரிக்கா-ஈரான் இடையே அணுசக்தி பேச்சுவார்த்தை


 

துபாய்,


ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அணுசக்தி பேச்சுவார்த்தை இன்று (வெள்ளிக்கிழமை) ஓமன் நாட்டில் நடைபெற உள்ளது. ஈரானில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டங்களின்போது நடந்த வன்முறை மோதல்களால் பதற்றம் நிலவும் சூழலில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது.


முதலில் துருக்கியில் நடைபெறுவதாக இருந்த இந்த பேச்சுவார்த்தை, ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரகச்சியின் கோரிக்கையைத் தொடர்ந்து ஓமனுக்கு மாற்றப்பட்டது. ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் இந்த பேச்சுவார்த்தைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.


இதற்கிடையே, ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனிக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஈரான் தலைவர் மிகுந்த கவலையுடன் இருக்க வேண்டும்" என்று டிரம்ப் காட்டமாகத் தெரிவித்துள்ளார். ஈரானின் ஏவுகணைத் திட்டம் மற்றும் அணுசக்தி விவகாரங்களில் டிரம்ப் நிர்வாகம் சமரசமற்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளதால், இந்தப் பேச்சுவார்த்தை உலக நாடுகளிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%