அமெரிக்க வரி விதிப்பால் மூலப்பொருள் விலை உயர்வு: கோவையில் வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம்
கோவை,
இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 50 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத இறுதியில் அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார். இதனால் கோவை, திருப்பூரில் ஜவுளித்தொழில் துறையினர் பெரும் பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். மேலும் மூலப்பொருட்களின் விலை உயர்வால் ஜவுளி, வார்ப்படம், மோட்டார் பம்ப் தொழில் நிறுவனங்களில் உற்பத்தி குறைந்து உள்ளது. இதன் காரணமாக தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.
இது குறித்து ஜவுளி தொழில் துறையினர் கூறியதாவது:-
கோவை மற்றும் திருப்பூர் பகுதியில் இருந்து அமெரிக்காவுக்கு ஆண்டுதோறும் சுமார் 3 பில்லியன் டாலர் ஜவுளிகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அமெரிக்க 50 சதவீதம் வரி விதித்ததால் அது ஒரு பில்லியன் டாலராக குறைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் அமெரிக்க சந்தைக்கான இந்திய ஜவுளி ஏற்றுமதி பூஜ்ஜியமாகி விடும். 50 சதவீத வரிக்கு கூடுதலாக, சாத்தியமான பிற நிலையான வரிகளும் உள்ளன.
இதனால் பொருட்களின் விலை மேலும் அதிகரிக்கும். இதற்கிடையே அமெரிக்கா 500 சதவீத வரி விதிக்கப்போவதாக கூறுகிறார்கள். அப்படியானால் ஜவுளி ஏற்றுமதி சரிவை சந்திக்கும். எனவே மாற்று வழியாக ஐரோப்பா மற்றும் இங்கிலாந்து நாட்டு சந்தைகளை இந்தியா வலுப்படுத்த வேண்டும் ஆப்பிரிக்க, மத்திய கிழக்கு மற்றும் ஆசிய சந்தைகள் போன்ற பிற சந்தைகள் உள்ளன, அவற்றில் சில வரம்புகள் உள்ளன.
ஆப்பிரிக்க சந்தைகள் நம்பகத்தன்மையற்றதால் சவாலாக இருக்கும். ஆசிய சந்தைகள் சிறியவை. அவற்றை மேம்படுத்தி அந்த நாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?