கலையனூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல்

கலையனூர் கிராமத்தில் சமத்துவ பொங்கல்



இராமநாதபுரம், ஜன.

இராமநாதபுரம் மாவட்டம் பெருவயல் பஞ்சா யத்துக்கு உட்பட்ட கலையனூர் கிராமத்தில் பாவை பவுண்டேஷன் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடை பெற்றது. இதில் விளையாட்டுப் போட்டிகள், கட்டுரைப் போட்டி கள், கோலப் போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற வர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இவ்விழாவில் பாவை பவுண்டேஷன் ஒருங்கி ணைப்பாளர் கனகராஜ், மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு ஒருங்கிணைப்பாளர் பரமேஸ்வரன், கலையனூர் கிராம தலைவர் பஞ்சவர்ணம், துணைத்தலைவர் சக்தி வேல், முத்தமிழ் கட்டுமான தொழில் சங்க தலைவர் குழந்தைவேலு, இளைஞர் மன்ற தலைவர் பழனிக் குமார், துணைத்தலைவர் அறிவழகன் மற்றும் செய்தித் தொடர்பாளர் அரி ஆகியோர் கலந்து கொண்டனர். இறைச்சி கடையில் தகராறு 7 பேர் மீது வழக்கு தேனி, ஜன.17- போடி அருகே இறைச்சி கடையில் தகராறு செய்த இரண்டு தரப்பைச் சேர்ந்த 7 பேர் மீது காவல்துறையினர் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். போடி அருகே பொட்டல்களம் வினோபாஜி தெருவில் வசிப்பவர் சின்னப்பாண்டி மகன் ஆனந்த் (28). பொட்டல்களம் வீட்டுவசதிவாரிய குடியிருப்பு அருகே சிக்கன் கடையை பால்பாண்டி மகன் முத்துப்பாண்டி, இவரது மனைவிகள் மேகலா, முத்துமாரி ஆகியோர் நடத்தி வருகின்றனர். இந்த கடையில் மது குடிக்க அனு மதிக்கக் கூடாது என ஆனந்த் கண்டித்தாராம். இதில் ஏற்பட்ட தகராறில் முத்துப்பாண்டி, மேகலா, முத்துமாரி, பால்கண்ணன் மகன் கணேசன் ஆகியோர் சேர்ந்து ஆனந்த், இவரது அண்ணன் அன்புச்செல்வன் (32), தாயார் லிங்கம்மாள் (52) ஆகியோரை தாக்கி காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம். இதில் ஆனந்த் உள்பட 3 பேரும் காயமடைந்தனர். இதுகுறித்து ஆனந்த் கொடுத்த புகாரின் பேரில் முத்துப்பாண்டி உள்பட 4 பேர் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்ற னர். இதனிடையே தன்னை தவறாக அழைத்து தகராறு செய்து தாக்கியதாக மேகலா புகார் செய்தார். அதன் பேரில் ஆனந்த், அன்புச்செல்வன், லிங்கம்மாள் ஆகி யோர் மீது போடி தாலுகா காவல் நிலைய போலீசார் தனியே வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். மது போதையில் கீழே விழுந்து காயமடைந்தவர் உயிரிழப்பு தேனி, ஜன.17- போடியில் வெள்ளிக்கிழமை, மது போதையில் கீழே விழுந்து காயமடைந்தவர் இறந்து போனது குறித்து போடி நகர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசா ரித்து வருகிறார்கள். போடி கீழத்தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம் மகன் செந்தில்குமார் (50). இவர் போடி -தேனி சாலை யில் சாலை காளியம்மன் கோயில் அருகே மது போதையில் கீழே விழுந்து காயமடைந்த நிலையில் கிடந்துள்ளார். அங்கிருந்தவர்கள் மீட்டு அவசர சிகிச்சை வாகனம் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கும், தீவிர சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மனைக்கும் அனுப்பி வைத்தனர். அங்கி சிகிச்சை பல னின்றி செந்தில்குமார் இறந்து போனார். இதுகுறித்து புகா ரின் பேரில் போடி நகர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். இராஜபாளையத்தில் இரு சடலங்கள் மீட்பு இராஜபாளையம், ஜன.17- இராஜபாளையம் புதிய பேருந்து நிலையம் அருகே ஓடையில் ஒரு சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் தெற்கு போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். விசாரணையில் ஆண்டத்தம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாண்டிய ராஜன் (59) என தெரியவந்தது. மேலும் இராஜபாளையம் கம்மாப்பட்டி பகுதியில் விசைத்தறி கூடம் அருகே ஒரு சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது. தெற்கு போலீசார் விசாரணை செய்தபோது கம்மாபட்டியைச் சேர்ந்த கண்ணன் மகன் சந்திரன் (35) என்பது தெரியவந்தது. இவருக்கு மனைவி, குழந்தைகள் உள்ளனர். இரு உடல்களையும் மீட்டு தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ள னர். ஒட்டன்சத்திரத்தில் சமத்துவ பொங்கல் விழா சின்னாளப்பட்டி, ஜன.17- திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் ஊராட்சியில் இளைஞர் நற்பணி மன்றத்தின் 42-வது ஆண்டு சமத்துவ பொங்கல் விழா உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் பல்வேறு மதத்தைச் சேர்ந்த பொது மக்கள், மதத் தலைவர்கள் மற்றும் குருமார்கள் சமத்துவ பொங்கல் வைத்து கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து, பொங்கல் விழாவின் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த உறியடிப்பு நிகழ்ச்சியில் அமைச்சர் சக்கரபாணி கண்களை கட்டிக்கொண்டு உறி யடித்து விழாவை உற்சாகப்படுத்தினார். பின்னர் நடை பெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் பி.சி.தங்கம், இளைஞர் அணி துணை அமைப்பாளர் ஆனந்தராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சின்னாளப்பட்டி பேரூராட்சி சின்னாளப்பட்டி சிறப்புநிலை பேரூராட்சியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. மன்றத் தலைவர் பிரதீபா கனகராஜ் தலைமை வகித்தார். துணைத்தலைவர் ஆனந்திபாரதிராஜா, செயல் அலு வலர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை எழுத்தர் முத்துராமன், துப்புரவு அலு வலர் மணிகண்டன், எழுத்தர்கள் ராமமூர்த்தி, கலைச் செல்வி, பில் கலெக்டர் தங்கத்துரை, துப்புரவு மேற் பார்வையாளர்கள் அகிலன், சரளா உட்பட பலர் கலந்து கொண்டனர்.


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%