அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து: சூப்பர் 8 சுற்றில் கால்பதித்தது ஜிம்பாப்வே

அயர்லாந்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து: சூப்பர் 8 சுற்றில் கால்பதித்தது ஜிம்பாப்வே


 

பல்லேகலே: ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்​கெட் தொடரில் நேற்று ‘பி’ பிரி​வில் இலங்​கை​யின் கண்​டி​யில் உள்ள பல்​லேகலே மைதானத்​தில் ஜிம்பாப்வே - அயர்லாந்து அணி​கள் மோது​வ​தாக இருந்​தது. ஆனால் இந்த ஆட்​டம் மழை காரண​மாக ஒருபந்​து​கூட வீசப்படாமல் ரத்து செய்​யப்​பட்​டது.


இதனால் இரு அணி​களுக்​கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இதன் மூலம் ஜிம்​பாப்வே அணி 5 புள்ளிகளு​டன் தனது பிரி​வில் 2-வது இடம் பிடித்து சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறியது. அந்த அணி 2 வெற்​றிகளை பதிவு செய்​திருந்​தது. இதே பிரி​வில் முன்​னாள் சாம்​பிய​னான இலங்கை அணி 6 புள்​ளி​களு​டன் ஏற்​கெனவே சூப்​பர் 8 சுற்றில் கால்​ப​தித்து இருந்​தது.


ஜிம்​பாப்வே - அயர்​லாந்து அணி​கள் இடையி​லான ஆட்​டம் ரத்து ஆனதால் இதே பிரி​வில் இடம் பெற்​றிருந்த முன்​னாள் சாம்​பிய​னான ஆஸ்​திரேலிய அணி சூப்​பர் 8 சுற்​றுக்கு முன்​னேறும் வாய்ப்பை இழந்​தது. இதனால் அந்த அணி லீக் சுற்​றுடன் வெளியேறுகிறது.


மிட்​செல் மார்ஷ் தலை​மையி​லான ஆஸ்​திரேலிய அணி 3 ஆட்​டங்களில் 2 தோல்​வி, ஒரு வெற்​றியை பதிவு செய்திருந்தது. லீக் சுற்றை 3 புள்​ளி​களு​டன் நிறைவு செய்த அயர்​லாந்து அணி தொடரில் இருந்து வெளியேறியது. 


Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%