
திருப்பத்தூர், அக். 18-
திருப்பத்தூர் பள்ளிக்கல்வித்துறை சார்பில் முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் பிறந்த நாள் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி, நடந்த அறிவியல் கண்காட்சியில், 36 பள்ளிகளைச் சேர்ந்த 170 மாணவர்கள் தங்களது அறிவியல் படைப்புகளை காட்சிப்படுத்தினர்.
இதில், சிறந்த அறிவியல் படைப்புகளை வெளிப்படுத்திய திருப்பத்தூர் ஸ்ரீ மீனாட்சி அரசு மேல்நிலைப்பள்ளி, கோணப்பட்டு அரசு உயர் நிலைப்பள்ளி, கூடப்பட்டு அரசு நடுநிலைப்பள்ளி என 3 பள்ளிகளுக்கு கேடயம் மற்றும் தலா ரூ.5 ஆயிரம் பரிசு தொகையை கலெக்டர் சிவசவுந்திரவல்லி நேற்று வழங்கினார். மனித உடல் உறுப்பு மண்டலங்களில் மு்பு குறித்த செயல்முறை விளக்கத்தை காட்சிப்படுத்தமைக்காக பிருந்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிக்கும் பரிசு வழங்கப்பட்டது.
Related News
Popular News
TODAY'S POLL

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?