அர்ஜுனன் கொடியில் அனுமன்

அர்ஜுனன் கொடியில் அனுமன்


கிருஷ்ணனின் ஆலோசனைபடி பாசுபதாஸ்திரத்தை பெற அர்ஜுனன் சென்று கொண்டிருக்கிறான். வழியில் ஒரு வானரம் ராம நாமத்தை ஜபித்தபடி அமர்ந்திருந்தது .நீண்ட நாட்களாக அர்ஜுனனுக்கு ராமனின் வில் திறமையை பற்றிய சந்தேகம் இருந்தது .அதை இந்த வானரத்திடம் கேட்கலாம் என முடிவு 

செய்தான் . வானரத்திடம் சென்று வானரமே எனக்கு ஒரு சந்தேகம் தீர்த்து வைப்பாயா என்றான் .கேள் என்றது வானரம் .ராமன் சிறந்த வில்லாளி ,அவன் ஏன் அம்புகளால் பாலம் காட்டாமல் வானரங்களை கொண்டு காட்டினார் என்றான் .அம்புகளால் கட்டப்படும் பாலம் என் ஒருவன் பாரத்தையே தாங்காதே மற்ற வானரங்களின் பாரத்தை எப்படி தாங்கும் என்றது வானரம் .இந்த நதியின் குறுக்கே அம்புகளால் பாலம் கட்டுகிறேன் எத்தனை வானரங்கள் வந்தாலும் தாங்கும் என்றான் அர்ஜுனன் .

  நான் கட்டும் பாலம் உன் பாரம் தாங்காமல் சரிந்தால் வேள்வி தீயில் குதித்து உயிரை மாய்த்து கொள்வேன் என்றான் அர்ஜுனன் . பாலம் சரியவில்லை என்றால் நான் உன் அடிமை எப்பொழுதும் உன் கொடியில் இடம் பெறுவேன் என்றது வானரம் அர்ஜுனன் தனது வில்லின் மூலம் அம்புகளால் 

நதியின் குறுக்கே பாலம் கட்டினான் .வானரம் ஜெய் ராம் என சொல்லிக்கொண்டே பாலத்தின் மீது காலை வைக்க பாலம் சரிந்தது .அதிர்ச்சி அடைந்த அர்ஜுனன் தீயை மூட்டி தீ குளிக்க தயாரானான் .கிருஷ்ணா என்னை மன்னித்துவிடு வந்த வேலையை விட்டுவிட்டு என் அகந்தையால் வம்பில் மாட்டிக்கொண்டேன் .என் சகோதரர்களை பார்த்துக்கொள் என்றான் .அது சமயம் அங்கு வந்த வேதியர் ஏன் தீ குளிக்க முயற்சிக்கிறாய் என் அர்ஜுனனிடம் கேட்க நடந்ததை சொல்கிறான் அர்ஜுனன் .சாட்சி இல்லாமல் நீங்கள் இருவரும் பந்தயம் காட்டியது தவறு.நான் சாட்சியாக இருக்கிறேன் நீ மீண்டும் பாலத்தை கட்டு வானரம் பாலத்தின் மீது ஏறட்டும் என்றார் அர்ஜுனனும் வானரமும் அதற்கு ஒப்புக்கொண்டனர் .அர்ஜுனன் கிருஷ்ணனை நினைத்து கொண்டே அம்புகளால் மீண்டும் பாலத்தை கட்டினான் வானரம் 

எப்படியும் பாலம் சரியும் வெற்றி நமக்குத்தான் என எண்ணி கொண்டே பாலத்தின் மீது ஏறி குதித்தது பலம் சரியவில்லை .திகைப்படைத்த வானரம் வேதியரை நோக்கி நீங்கள் யார் என்றது .வேதியர் சங்கு சக்கரத்துடன் பரந்தாமனாக காட்சி அளித்தார்.இருவரும் பரந்தாமனை வணங்கினர்அர்ஜுனா இந்த வானரம் தான் அனுமன் என அர்ஜுனனுக்கு அறிமுக படுத்தினர் அர்ஜுனன் அனுமனை வணங்கி தன்னை மன்னிக்குமாறு வேண்டினான் . .நீங்கள் இருவரும் தோற்கவில்லை அர்ஜுனன் தான்

ஒரு சிறந்த வில்லாளி என்ற அகந்தையுடன் முதலில் பலம் கட்டினான் .அனுமனோ ராமா நாமத்தின் மீது நம்பிக்கை வைத்து பாலத்தின் மீது ஏறினான் .பாலம் சரிந்தது .இரண்டாவது தடவை அர்ஜுனன் என்னை முயற்சித்தான் இங்கு வெற்றி பெற்றது உங்கள் பக்தியே தோல்வி அடைந்தது உங்கள் அகம்பாகமே என்றார் .

அனுமனை அழைநினைத்துக்கொண்டு பாலம் கட்டினான் .அனுமனோ ராமா நாமத்தை மறந்து தன் வலிமையால் பாலத்தை உடைக்கத்து நீ இருக்கும் இடத்தில் மந்திர தந்திரங்கள் பலிக்காது எனவே அர்ஜுனனின் தேர் கொடியில் அமர்ந்து யுத்தத்தத்தில் 

அவனுக்கு உதவி புரிவாயாக என்றார் .அப்படியே செய்கிறேன் ஸ்வாமி என்கிறார் அனுமன் .அன்றுமுதல் அர்ஜுனன் கொடியில் அமர்ந்து 

அர்ஜுனனுக்கு உதவி புரியலானார்


ராஜகோபாலன்.J

சென்னை 18

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%