ஆதிபராசக்தி

ஆதிபராசக்தி


அம்மன் அவள் அலங்கார ரூபமவள்

அகிலமெல்லாம் ஆளுபவள்

அன்பருக்கெல்லாம் அருளுபவள்

அனைவரையும் காப்பவள்

ஆயக்கலைகள் எல்லாம் தருபவள்

ஆதிபராசக்தி அவள்.


இம்மையில் அவள் இன்பமானவள்

இடரெல்லாம் நீக்கிடுவாள்

இதயமெல்லாம் நிறைந்திடுவாள்

இன்பமெல்லாம் தந்திடுவாள்

இருளெல்லாம் போக்கிடுவாள்

ஆதிபராசக்தி அவள்.


உயிர்களெல்லாம் உறைபவளாம்

உலகுக்கெல்லாம் அன்னை அவள்

நம் உணர்வோடு கலந்திடுவாள்

உண்மையெல்லாம் அறிந்திடுவாள்

உள்ள நோயெல்லாம் தீர்த்திடுவாள்

ஆதிபராசக்தி அவள். 

       

        

 ரங்கநாயகி ராமன்

 பம்மல்.

Related News

Follow US

TODAY'S POLL

vote-image

தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?

50%
50%