மாயாவி மேகநாதனின்
விசித்திரவில் நீதானோ?
அந்தரத்தில் நீ
வளைந்திருக்கும்
வனப்பை பார்த்து
வண்ணமலர்களெல்லாம் அம்புகளாகிவிட
ஆசைப்படுகின்றன!
கருப்பு வெள்ளையாகவே
பார்த்து சலித்துபோன
கதிரவனுக்கு நீ ஓர்
வண்ணத்தொலைக்காட்சி!
சிவதனுசுவை ஒடித்து
சீதையை மணந்த
இராமனாலும் கூட
உன்னை ஒடிக்க முடியாது!
அழகின் சாம்ராஜ்யத்தில்
கம்பமில்லாமல்
ஏற்றிவைக்கப்பட்ட
தேசியக்கொடியோ?
சொர்க்கத்தின்
திறப்புவிழாவோ?
தெரியவில்லை!
ஏழுநிற ரிப்பன்கள்
கட்டப்பட்டுள்ளன
கத்திரிக்க மனமில்லாமல்
கதிரவன் சிறப்புவிருந்தினராய்
ரசித்து கொண்டிருக்கிறான்!
ஆனாலும் வானவில்லே நீ ஏழு
நிறங்களானாலும்
ஒன்றுபட்டு இருக்கிறாய்
மனிதனோ நிற வேற்றுமையால் பிரிந்து கிடக்கிறான்!

கவிஞர் த.அனந்தராமன்
துறையூர்
Related News
Popular News
TODAY'S POLL
தேசிய ஓய்வூதிய முறையின் கீழ் கிடைக்கும் 'வரி சலுகைகள்' ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கும் பொருந்தும். இது ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தைத் தேர்வுசெய்ய ஊழியர்களை ஊக்குவிக்குமா?